2025 நவம்பர் 05, புதன்கிழமை

பலூன் டோரை வென்ற டெம்பிலி

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான லமீன் யமாலைத் தாண்டி பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான லமீன் யமால் பலூன் டோரை வென்றார்.

சம்பியன்ஸ் கிண்ணம், லீக் 1, பிரெஞ்சுக் கிண்ணத் தொடரில் பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனான நிலையில், 53 போட்டிகளில் குறித்த பருவகாலத்தில் விளையாடி 35 கோல்களை 28 வயதான டெம்பிலி பெற்றிருந்தார்.

இதேவேளை சிறந்த 21 வயதுக்குட்பட்ட வீரருக்கான விருதை இரண்டாவது ஆண்டாக 18 வயதான லமால் வென்றிருந்தார்.

இந்நிலையில் பார்சிலோனாவின் ஐடானா பொன்மதி தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக பலூன் டோரை வென்று இவ்வாறான முதல் வீராங்கனையாக தனது பெயரைப் பதிந்து கொண்டார்.

இதேவேளை சிறந்த அணியாகவும் பரிஸ் ஸா ஜெர்மைன் தெரிவானதுடன், சிறந்த கோல் காப்பாளராக கடந்த பருவகாலத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனில் இருந்த ஜல்லூயிஜி டொன்னருமா தெரிவானதுடன், சிறந்த முகாமையாளராக பரிஸ் ஸா ஜெர்மைனின் லூயிஸ் என்றிக்கே தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X