Shanmugan Murugavel / 2021 மார்ச் 29 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஹ்ரேய்ன் குரான் பிறீயில், றெட் புல் அணியின் ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனை வெற்றி பெறாமல் தடுத்து, மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் அபார வெற்றி பெற்றிருந்தார்.
நேற்றிரவு நடைபெற்ற குறித்த பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன், நான்கு சுற்றுக்கள் இருக்கத் தக்கதாக பிரித்தானியாவின் ஹமில்டனை முந்தியிருந்தபோதும், ஓடுபாதைக்கு வெளியே சென்று முந்தியமை காரணமாக அவரை முந்த விடவேண்டியிருந்தது.
பந்தயத்தில் ஆரம்பத்தில் வெர்ஸ்டப்பன் முன்னிலை பெற்றபோதும், ஹமில்டனை வெர்ஸ்டப்பனுக்கு முன்னரே டயர்களை மாற்றுவதற்காக மெர்சிடீஸ் நிறுத்தியிருந்த நிலையில் ஹமில்டன் முன்னிலை பெற்றிருந்தார். பின்னர் இரண்டாவது தடவை டயர்களை மாற்றும்போதும் தனது முன்னிலையை ஹமில்டன் பேணியிருந்தார்.
ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணி ஓட்டுநரான வல்டேரி போத்தாஸ், இப்பந்தயத்தில் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago