J.A. George / 2023 ஒக்டோபர் 10 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மகீஷ் தீக்ஷன, பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுமார் ஒரு மாத காலமாக தசை உபாதைக்கு முகம் கொடுத்திருந்த மகீஷ் தீக்ஷன, தற்போது போட்டியில் விளையாட முழு உடற்தகுதியினைப் பெற்றுள்ளார்.
23 வயதுடைய மகீஷ் தீக்ஷன ஆசியக் கிண்ணத் தொடரின் போது உபாதைக்குள்ளாகியிருந்த நிலையில், உலகக் கிண்ணத் தொடரிலும் விளையாடுவது சந்தேகமாக இருந்தது.
எனினும், உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் உடல் நிலை தேறியதாக தெரிவிக்கப்பட்டு உலகக் கிண்ண இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.
எனினும், தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் தீக்ஷன விளையாடவில்லை.
இந்த நிலையில், தீக்ஷன பாகிஸ்தான் போட்டியில் ஆடுவதற்காக பூரண உடற்தகுதியுடன் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளரான நவீட் நவாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஹைதராபாதில் ஆரம்பமாகின்றது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago