Shanmugan Murugavel / 2021 ஜனவரி 05 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் முடிவில் 354 ஓட்டங்கள் முன்னிலையில் நியூசிலாந்து காணப்படுகிறது.
இன்றைய மூன்றாம் நாளை 3 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த நியூசிலாந்து, அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனின் 238, ஹென்றி நிக்கொல்ஸின் 157, டரைல் மிற்செல்லின் ஆட்டமிழக்காத 102 ஓட்டங்களுடன் 6 விக்கெட் இழப்புக்கு 659 ஓட்டங்களைப் பெற்றபடி தமது முதலாவது இனிங்ஸை நியூசிலாந்து இடைநிறுத்தியது.
பதிலுக்கு, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான், கைல் ஜேமிஸினிடம் ஷண் மசூட்டின் விக்கெட்டை இழந்து இன்றைய மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு எட்டு ஓட்டங்களைப் பெற்று, நியூசிலாந்தின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 354 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
பாகிஸ்தான்: 297/10 (துடுப்பாட்டம்: அஸார் அலி 93, மொஹமட் றிஸ்வான் 61, பாஹீம் அஷ்ரஃப் 48, ஸஃபார் கொஹர் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: 5/69, டிம் செளதி 2/61, மற் ஹென்றி 1/68, ட்ரெண்ட் போல்ட் 2/82)
நியூசிலாந்து: 659/6 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் 238, ஹென்றி நிக்கொல்ஸ் 157, டரைல் மிற்செல் ஆ.இ 102, டொம் லேதம் 33, கைல் ஜேமிஸன் ஆ.இ 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் அப்பாஸ் 2/98, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/101, பாஹீம் அஷ்ரஃப் 2/106)
பாகிஸ்தான்: 8/1 (பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 1/1)
4 minute ago
37 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
37 minute ago
51 minute ago
1 hours ago