Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 06 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஏற்கெனவே முதலாவது போட்டியை வென்றிருந்த நியூசிலாந்து, கிறைஸ்ட்சேர்ச்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என தொடரை வென்றுள்ளது.
நேற்றைய நான்காம் நாளை ஒரு விக்கெட் இழப்புக்கு எட்டு ஓட்டங்களைப் பெற்றவாறு தமது இரண்டாவது இனிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான், குறிப்பிட்ட இடைவேளைகளில் ட்ரெண்ட் போல்ட், கைல் ஜேமிஸன், கேன் வில்லியம்ஸினிடம் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களையே பெற்று இனிங்ஸ் மற்றும் 176 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில், ஸஃபார் கொஹர் 37, அஸார் அலி 37, பாஹீம் அஷ்ரஃப் 28, அபிட் அலி 26 ஓட்டங்களைப் பெற்றனர். ஜேமிஸன் 6, போல்ட் 3, வில்லியம்ஸன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஜேமிஸனும், தொடரின் நாயகனாக வில்லியம்ஸனும் தெரிவாகினர்.
இந்நிலையில், தொடரை 2-0 என வென்றமையைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதற்தடவையாக முதலாமிடத்துக்கு நியூசிலாந்து முன்னேறியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
பாகிஸ்தான்: 297/10 (துடுப்பாட்டம்: அஸார் அலி 93, மொஹமட் றிஸ்வான் 61, பாஹீம் அஷ்ரஃப் 48, ஸஃபார் கொஹர் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: 5/69, டிம் செளதி 2/61, மற் ஹென்றி 1/68, ட்ரெண்ட் போல்ட் 2/82)
நியூசிலாந்து: 659/6 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் 238, ஹென்றி நிக்கொல்ஸ் 157, டரைல் மிற்செல் ஆ.இ 102, டொம் லேதம் 33, கைல் ஜேமிஸன் ஆ.இ 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் அப்பாஸ் 2/98, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/101, பாஹீம் அஷ்ரஃப் 2/106)
பாகிஸ்தான்: 186/10 (பந்துவீச்சு: துடுப்பாட்டம்: அஸார் அலி 37, ஸஃபார் கொஹர் 37, பாஹீம் அஷ்ரஃப் 28, அபிட் அலி 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 6/48, ட்ரெண்ட் போல்ட் 3/43, கேன் வில்லியம்ஸன் 1/16)
போட்டியின் நாயகன்: கைல் ஜேமிஸன்
தொடரின் நாயகன்: கேன் வில்லியம்ஸன்
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025