Editorial / 2019 நவம்பர் 17 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து, அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பற்றின்சன் விலகியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்த விக்டோரியா மாநிலத்தின், குயின்ஸ்லாந்து மாநிலத்துக்கெதிரான அவுஸ்திரேலிய முதற்தரப் போட்டித் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் நடத்தை விதிக்கோவை மீறலொன்றுக்காக, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிலிருந்து ஒரு போட்டித் தடையைப் பெற்றதைத் தொடர்ந்ததே குறித்த போட்டியிலிருந்து பற்றின்சன் விலகியுள்ளார்.
வீரரொருவரை தனிப்பட்ட ரீதியாகத் தாக்குவதற்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நடத்தைக் கோவையின் 2.13 சரத்தை இரண்டாம் கட்டத்தில் மீறியதாக பற்றின்சன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கமரொன் கனொன் என நம்பப்படும் வீரர் மீதான வார்த்தைப் பிரயோகத்தின்போது பற்றின்சன் எல்லை மீறியதான நடுவர்கள் ஜோன் வோர்ட், ஷோன் கிரேய்க் ஆகியோர் உணர்ந்துள்ளனர்.
அந்தவகையில், பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட்டுடன் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக மிற்செல் ஸ்டார்க் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்துக்கெதிரான நியூ சவுத் வேல்ஸ் மாநில ஷீல்ட் போட்டியின்போது எதிர்ப்பை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு, அவரது போட்டி ஊதியத்தின் 25 சதவீதமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
21 minute ago
46 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago
5 hours ago
27 Jan 2026