2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் 449 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 03 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் முதலாவது இனிங்ஸில் 449 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், கராச்சியில் நேற்று ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் டிம் செளதி, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, டொம் லேதம், டெவோன் கொன்வே மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. பின்னர் 71 ஓட்டங்களுடன் நசீம் ஷாவிடம் லேதம் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த கேன் வில்லியம்ஸனும், கொன்வேயும் இணைந்து இனிங்ஸை நகர்த்திய நிலையில், சிறிய இடைவெளிகளில் 122 ஓட்டங்களுடன் அக்ஹா சல்மானிடம் கொன்வேயும், ஷாவிடம் 36 ஓட்டங்களுடன் வில்லியம்ஸனும் வீழ்ந்தனர்.

தொடர்ந்து வந்த டரைல் மிற்செல், 26 ஓட்டங்களுடன் ஹென்றி நிக்கொல்ஸ் ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளிகளில் சல்மானிடம் வீழ்ந்ததோடு, மிஷெல் பிறேஸ்வெல்லும் அப்ராஹ் அஹ்மட்டிடம் வந்தவுடனேயே ஆட்டமிழந்திருந்தார்.

பின்னர் இஷ் சோதி ஷாவிடம் வீழ்ந்ததோடு, 51 ஓட்டங்களுடன் டொம் பிளன்டலும், செளதியும் அஹ்மட்டிடம் வீழ்ந்தனர். இந்நிலையில், இறுதி விக்கெட்டுக்காக மற் ஹென்றியும், அஜாஸ் பட்டேலும் சத இணைப்பாட்டத்தை பகர்ந்த நிலையில், 35 ஓட்டங்களுடன் அஹ்மட்டிடம் பட்டேல் விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 449 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றது. ஹென்றி ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X