Shanmugan Murugavel / 2022 மார்ச் 06 , பி.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் இன்று நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஆரம்பத்தில் ஷெஃபாலி வர்மாவை இழந்தபோதும், ஸ்மிருதி மந்தனாவின் 52 (75), தீப்தி ஷர்மாவின் 40 (57) ஓட்டங்கள் மூலம் இனிங்ஸை நகர்த்தியது. பின்னர் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும், பூஜா வஸ்ராகரின் 67 (59), ஸ்னே ரானாவின் ஆட்டமிழக்காத 53 (48) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 245 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களையே பெற்று 107 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், ராஜேஸ்வரி கைகவாட் 4, ஜுலான் கோஸ்வாமி, ஸ்னே ரானா ஆகியோர் தலா 2, மேக்னா சிங்க், தீப்தி ஷர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகியாக பூஜா வஸ்ராகர் தெரிவானார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026