Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஜனவரி 09 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், நெல்சனில் இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில், டக் வேர்த் லூயிஸ் முறைப்படி, ஏழு பந்துகள் மீதமிருக்கையில் 8 விக்கெட்டுகளால் நியூசிலாந்து வென்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது. துடுப்பாட்டத்தில், மொஹமட் ஹபீஸ் 60 (71), ஷடாப் கான் 52 (68), ஹஸன் அலி 51 (31) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லொக்கொ பெர்கியூஸன் 3, டிம் செளதி, டொட் அஸ்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 247 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து, 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போட்டியில் மழை குறுக்கிட்டது.
இந்நிலையில், மழை விட்ட பின்னர், டக் வேர்த் லூயிஸ் முறைப்படி, 25 ஓவர்களில் 151 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நியூசிலாந்துக்கு வழங்கப்பட, 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்த நிலையில் வெற்றியிலக்கயடைந்தது. துடுப்பாட்டத்தில், மார்டின் கப்தில் ஆட்டமிழக்காமல் 86 (71), றொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 45 (43) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் ஆமிர், பாஹீம் அஹ்ரப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக மார்டின் கப்தில் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
45 minute ago