Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், தென்னாபிரிக்காவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்கா, குயின்டன் டி கொக், ஏய்டன் மர்க்ரம் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. பின்னர் பாஹீம் அஷ்ரஃப்பிடம் மர்க்ரம் வீழ்ந்தபோதும், டி கொக் மற்றும் அணித்தலைவர் தெம்பா பவுமா மூலம் இனிங்ஸை தென்னாபிரிக்க நகர்த்தியது.
தொடர்ந்து ஹரிஸ் றாஃப்பிடம் டி கொக் வீழ்ந்ததையடுத்து, றஸி வான் டர் டுஸன் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியதுடன், அவர் மொஹமட் ஹஸ்னைன், பவுமா ஹரிஸ் றாஃப்பிடம் வீழ்ந்தபோது, டேவிட் மில்லரின் அதிரடியுடன், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 341 ஓட்டங்களை தென்னாபிரிக்கா பெற்றது. துடுப்பாட்டத்தில், பவுமா 92 (102), டி கொக் 80 (86), வான் டர் டுஸன் 60 (37), மில்லர் ஆட்டமிழக்காமல் 50 (27), மர்க்ரம் 39 (34) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு, 342 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சார்பாக பக்கர் ஸமன் மாத்திரம் 193 (155) ஓட்டங்களைப் பெற்று இறுதி வரை போராடியபோதும், ஏனையோர் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த நிலையில், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான், 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், நொர்ட்ஜே 3, பெக்லுவாயோ 2, றபாடா, 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக பக்கர் ஸமன் தெரிவானார்.
5 minute ago
10 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
19 minute ago