2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தை நிராகரித்த ஹஃபீஸ்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் சி பிரிவு ஒப்பந்தமொன்றை, அவ்வணியின் முன்னாள் தலைவரான மொஹமட் ஹஃபீஸ் நிராகரித்துள்ளார்.

குறைந்த மட்ட ஒப்பந்தமொன்று வழங்கப்பட்டமை காரணமாகவே அதிருப்தியடைந்து ஒப்பந்தத்தை 40 வயதான ஹஃபீஸ் நிராகரித்ததாகக் கருதப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் ஒப்பந்தமில்லாமல் இருக்கும் ஹஃபீஸ், விளையாடும் போட்டிகளுக்காக கடந்தாண்டு பிரிவு ஏ போட்டி ஊதியங்களைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், பிரிவு பியிலிருந்து பிரிவு ஏக்கு விக்கெட் காப்பாளர் மொஹமட் றிஸ்வான் தரமுயர்த்தப்பட்டதுடன், துடுப்பாட்டவீரர் பவாட் அலாமுக்கு பிரிவு சி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .