2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

பாகிஸ்தான் வீரர்களுக்கெதிராக இந்தியா முறைப்பாடு

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரின் இந்தியாவுக்கெதிரான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர்களான ஹரிஸ் றாஃப், சஹிப்ஸடா பர்கான் களத்தில் மேற்கொண்ட பிரதிபலிப்புகளுக்காக சர்வதேச கிரிக்கெட் சபையில் உத்தியோகபூர்வ முறைப்பாடொன்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தாக்கல் செய்துள்ளது.

எழுத்து மூலம் குற்றச்சாட்டுகளை பர்ஹானும், றாஃப்பும் மதித்தால் சர்வதேச கிரிக்கெட் சபையின் விசாரணையொன்று நடக்கும். போட்டி மத்தியஸ்தர் றிச்சி றிச்சர்ட்சனின் கீழ் பர்ஹானும், றாஃப்பும் ஆஜராக வேண்டியிருக்கும்.

அரைச்சதத்தைப் பூர்த்தி செய்த பின்னர் பர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போலவும், ஆறு விமானங்களை வீழ்த்தியது போன்று இரசிகர்களை நோக்கி றாஃப்பும் வெளிப்படுத்தியதே முறைப்பாடளிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X