Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானின் சைடாமாவில் நேற்று இடம்பெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுடனான சிநேகபூர்வ போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி வென்றது.
இப்போட்டியின் 34ஆவது நிமிடத்தில் செல்சியின் மத்தியகளவீரர் ஜோர்ஜினியோவிடம் அழுத்தத்தை எதிர்கொண்ட பார்சிலோனாவின் மத்தியகளவீரர் சேர்ஜியோ புஷ்கட்ஸ் பந்தை உதைய முற்பட்டவேளை அது செல்சியின் முன்களவீரர் டம்மி ஏப்ரஹாமை நோக்கிச் சென்ற நிலையில், பந்தைக் கைப்பற்றிய அவர் பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகனைத் தாண்டி கோலாக்கி செல்சிக்கு முன்னிலையை வழங்கினார்.
இதையடுத்த சில நிமிடங்களில் பார்சிலோனாவின் பின்களத்தை வேகமான ஊடறுத்து செல்சியின் மத்தியகளவீரர் கிறிஸ்டியன் புலிசிச் சென்றபோதும், அவரின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது வெளியே சென்றிருந்த நிலையில், முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில், 55ஆவது நிமிடத்தில் செல்சியின் பின்களவீரர்கள் மூவரைத் தாண்டி பார்சிலோனாவின் முன்களவீரரான கார்லஸ் பெரேஸ் சென்றபோதும் அவரால் செல்சியின் கோல் காப்பாளர் கெபா அரிஸபலாகாவைத் தாண்டிச் சென்றிருக்க முடியவில்லை.
இந்நிலையில், போட்டி முடிவடைய ஒன்பது நிமிடங்களிருக்கையில் செல்சியின் மத்தியகளவீரர் றொஸ் பார்க்லி, பெனால்டி பகுதிக்கு முன்னிருந்து பெற்ற அபார கோலின் காரணமாக தமது முன்னிலையை செல்சி இரட்டிப்பாக்கியது.
அந்தவகையில், போட்டி முடிவடைவதற்கு சற்று முன்னர் பெனால்டி பகுதிக்கு சற்று வெளியே பிறீ கிக்கொன்றை பார்சிலோனா பெற்றபோதும், அவ்வணியின் மத்தியகளவீரர் இவான் றகிட்டிச் உதைந்த உதையானது கோல் கம்பத்துக்கு மேலால் சென்றிருந்தது.
இந்நிலையில், இறுதி நிமிடங்களில் றகிட்டிச் ஒரு கோலைப் பெற்ற நிலையில் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.
இப்போட்டியில் பார்சிலோனாவின் முன்களவீரர்களான லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் விளையாடியிருக்காதநிலையில், பார்சிலோனா சார்பாக, இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டிலிருந்து 120 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்களவீரரான அன்டோனி கிறீஸ்மன் மற்றும் பிரங்கி டி ஜொங் ஆகியோர் பார்சிலோனாவில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
3 hours ago
5 hours ago