Shanmugan Murugavel / 2020 நவம்பர் 12 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சிநேகபூர்வ போட்டிகளில், பிரான்ஸில் இன்று அதிகாலை நடைபெற்ற பின்லாந்துடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் தோற்றது.
பின்லாந்து சார்பாக, மார்க்கஸ் பொர்ஸ், ஒன்னி வளகரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, நெதர்லாந்தில் நடைபெற்ற நெதர்லாந்துக்கும், ஸ்பெய்னுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஸ்பெய்ன் சார்பாகப் பெறப்பட்ட கோலை சேர்ஜியோ கனலெஸ் பெற்றதோடு, நெதர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை டொனி வான் டீ பீக் பெற்றிருந்தார்.
இந்நிலையில், துருக்கியில் நேற்றிரவு நடைபெற்ற துருக்கி, குரோஷியாவுக்கிடையேயான போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. துருக்கி சார்பாக, செங்க் டொசுன், டெனிஸ் துருச், செங்கிஸ் அன்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், குரோஷியா சார்பாக, அன்டே புடிமிர், மரியோ பஸ்காலிச், ஜோசிப் பிறெகலோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026