Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய குரான் பிறீயை, சாதனை ரீதியாக ஆறாவது தடவையாக மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் வென்றுள்ளார்.
விபத்தொன்றைத் தொடர்ந்ததான பாதுகாப்புக் கார் காலப்பகுதியின் மூலம் பயனடைந்து தனது முன்னிலையைத் தொடர்ந்த ஹமில்டன், இவ்வாண்டில் இடம்பெற்ற 10 பந்தயங்களில் தனது ஏழாவது வெற்றியை நேற்று பெற்றுக் கொண்டார்.
இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் முன்னிலை பெற்றபோதும் அவரை முதல் மூன்று சுற்றுக்களிலும் சவாலுக்குட்படுத்திய ஹமில்டன், நான்காவது சுற்றில் அவரை முந்தியது போலத் தோன்றியபோதும், மீண்டும் போத்தாஸ் முன்னிலை பெற்றிருந்தார்.
அவ்வாறாக 16ஆவது சுற்று வரைக்கும் இரண்டாமிடத்திலிருந்த ஹமில்டன், அப்போது தனது டயர்களை மாற்றுவதற்காக போத்தாஸ் தனது காரை நிறுத்தியபோது முன்னிலை பெற்று, அல்ஃபா றோமியோ அணியின் இத்தாலிய ஓட்டுநரான அன்டோனியோ ஜியோவினாஸி விபத்துக்குள்ளான பாதுகாப்புக் கார் காலப் பகுதியில் தனது டயர்களை மாற்றி முன்னிலையைத் தொடர்ந்து வென்றிருந்தார். தவிர, இறுதிச் சுற்றில் வேகமான சுற்றைப் பூர்த்தி செய்து அதற்கான புள்ளியையும் பெற்றிருந்தார்.
ஹமில்டனுக்கு அடுத்ததாக போத்தாஸ் இரண்டாமிடத்தையும், ஃபெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர். றெட் புல் அணியின் பிரான்ஸ் ஓட்டுநரான பியரி கஸ்லி நான்காமிடத்தையும் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் ஐந்தாமிடத்தையும் பெற்றனர்.
இந்நிலையில், இப்பந்தயத்தில் வெர்ஸ்டப்பனுடன் மோதியதன் காரணமாக ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டலுக்கு 10 செக்கன் தண்டமும், அவர் சுப்பர் ஓட்டுநர் உரிமத்தில் 10 இரண்டு தண்டப் புள்ளிகளும் வழங்கப்பட்டிருந்தன.
அந்தவகையில், இப்பந்தயத்தில் பெற்ற வெற்றியுடன் நடப்பாண்டுக்கான ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள போத்தாஸை விட தனது முன்னிலையை 39 புள்ளிகளாக ஹமில்டன் அதிகரித்துக் கொண்டுள்ளார்.
முதலாமிடத்தில் 223 புள்ளிகளுடன் ஹமில்டன் காணப்படுகின்றநிலையில், 184 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் போத்தாஸ் காணப்படுகின்றார். 136 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் வெர்ஸ்டப்பனும், 123 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் வெட்டலும், 120 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் லெக்கலெர்க்கும் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
9 hours ago