Editorial / 2018 மார்ச் 05 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், எஸ். சி பிரைபேர்க் அணியின் மைதானத்தில், நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, கொரென்டின் டொலிஸோ, சன்ட்றோ வக்னர், தோமஸ் முல்லர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இப்போட்டியின் முடிவில், புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 63 புள்ளிகளைப் பெற்றுள்ள பெயார்ண் மியூனிச் தரவரிசையில் முதலிடத்தில் காணப்படுகிறது. இரண்டாமிடத்தில் காணப்படுகின்ற எப்.சி ஷல்கே, பெயார்ண் மியூனிச்சை விட 20 புள்ளிகள் குறைவாக 43 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago