Editorial / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டை மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, நிக்கொலஸ் ஒட்டமென்ட்டி, டேவிட் சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அஞ்சலோ ஒக்பொன்னா பெற்றார்.
இந்நிலையில், குறித்த போட்டியுடன் சேர்த்து இப்பருவகால பிறீமியர் லீக்கில் 13 வெற்றிகளை தொடர்ச்சியாகப் பெற்றுள்ள மன்செஸ்டர் சிற்றி, பிறீமியர் லீக் பருவகாலமொன்றில் அதிக வெற்றிகளை தொடர்ச்சியாகப் பெற்ற கழகமென்ற சாதனையைச் சமப்படுத்தியுள்ளது.
59 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago