Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 07 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
டொட்டென்ஹாம் சார்பாக பிரென்னன் ஜோன்சன், ஜேம்ஸ் மடிஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பிறைட்டன் சார்பாக யன்குபா மின்டெஹ், ஜோர்ஜினியோ ருட்டர், டனி வெல்பக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற நொட்டிங்ஹாம் பொரெஸ்டுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் செல்சி சமப்படுத்தியது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை நொனி மதுக்கே பெற்றதோடு, நொட்டிங்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ் வூட் பெற்றிருந்தார்.
இந்நிலையில் அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியை 0-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.
11 minute ago
24 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
35 minute ago
2 hours ago