Editorial / 2024 மார்ச் 08 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்ட 06 கழகங்களுக்கிடையிலான 05 பந்து பரிமாற்றம் கொண்ட மென்பந்து சுற்றுப் போட்டி, வெள்ளிக்கிழமை (8) நடைபெற்றது.
AU Lanka நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
இறுதி சுற்று சுதந்திரபுரம் இளைஞர் அணிக்கும் புதுக்குடியிருப்பு கோம்பாவில் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் நடைபெற்றது.
கோம்பாவில் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் முதலிடத்தினை பெற்றுக் கொண்டது. சிறந்த ஆட்ட நாயகனாக கோம்பாவில் விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தின் குமாரசாமி சதுஜனன் பெற்றுக் கொண்டார்.
தொடர் ஆட்ட நாயகனாக சுதந்திரபுரம் இளைஞர் அணியின் திலக் தெரிவு செய்யப்பட்டார். அதி கூடிய இலக்குகளை வீழ்த்தியவராக கோம்பாவில் விக்னேஸ்வரா அணியின் திலகன் தெரிவு செய்யப்பட்டார்.
இத்தொடரில் மூன்றாம் இடத்தினை மூங்கிலாறு அணி பெற்றுக் கொண்டது.
நடராசா கிருஸ்ணகுமார்






6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025