Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஜூலை 04 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வென்று 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. மழை காரணமாக 47 ஓவராக குறைக்கப்பட்டது.
நாணய சுழச்சியில் வென்ற இந்தியா, முதலில் பந்து வீசுவதற்கு முடிவு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் இங்கிலாந்து அணி 219 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக நடாலிசீவர் 49 ஓட்டங்களையும், கேப்டன் ஹீதர் நைட் 46 ஓட்டங்களையும், வின்பீல்டு ஹில் 36 ஓட்டங்களையும் பெற்றனர். .
இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். மற்றவர்கள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 220 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 29 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 49 ரன்னில் வெளியேறி அரை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
அடுத்து இறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி? அரை சதமடித்தார். 75 ஓட்டங்கள் எடுத்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், இந்தியா 46.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ஓட்டங்களை எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது கேப்டன் மிதாலி ராஜுக்கு அளிக்கப்பட்டது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago