Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 15 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், பெல்ஜியத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற அவ்வணியுடனான குழு பி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது.
பிரான்ஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ரன்டல் கொலோ முவானி பெற்றதோடு, பெல்ஜியம் சார்பாகப் பெறப்பட்ட கோலை லொய்ஸ் ஒபென்டா பெற்றிருந்தார்.
இதேவேளை காலிறுதிப் போட்டிகளுக்கு ஜேர்மனி தகுதி பெற்றது. தம்நாட்டில் நடைபெற்ற நெதர்லாந்துடனான குழு சி போட்டியில் வென்றமையையடுத்தே காலிறுதிப் போட்டிக்கு ஜேர்மனி தகுதி பெற்றது. ஜேர்மனி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேமி லெவெலிங் பெற்றிருந்தார்.
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago