Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் ஷென்ஸனில் நடைபெற்றுவரும் பெண்கள் டென்னிஸ் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், நேற்று நடைபெற்ற சிவப்புக் குழுப் போட்டியொன்றில், உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான கிகி பேர்ட்டன்ஸிடம் உலகின் முதல்நிலை வீராங்கனையான அஷ்லி பார்ட்டி தோல்வியடைந்தார்.
இப்போட்டியில் முதலாவது செட்டை 6-3 என அவுஸ்திரேலியாவின் பார்ட்டி வென்றபோதும், 3-6, 4-6 என்ற அடுத்த இரண்டு செட்களையும் இழந்த நிலையிலேயே நெதர்லாந்தின் பேர்ட்டன்ஸிடம் தோல்வியடைந்திருந்தார்.
தோட்பட்டை காயம் காரணமாக இத்தொடரிலிருந்து நேற்று விலகிய உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான நயோமி ஒஸாகாவையே பேர்ட்டன்ஸ் பிரதியிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மற்றைய சிவப்புக் குழுப் போட்டியில், செக் குடியரசின் பெற்றா குவிற்றோவாவை 6-1 என்ற செட் கணக்கில் முதலாவது செட்டில் வென்ற சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிச், 3-6 என இரண்டாவது செட்டை இழந்தபோதும், 6-4 என தீர்க்கமானது மூன்றாவது செட்டை வென்று போட்டியை வென்றிருந்தார்.
10 minute ago
35 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
35 minute ago
5 hours ago
27 Jan 2026