Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்து வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் குழாமில் பவாத் அலாம் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ஐக்கிய அரபு எமீரகத்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட குழாமிலேயே அவர் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை இம்மாத இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்காக சிம்பாப்வேக்கு பயணமாகவுள்ள பாகிஸ்தான் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக கடந்த தொடர்களில் பங்கேற்காத ஷோய்ப் மஸ்கூத் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இருபது-20 போட்டிகளுக்கான 14 பேர் கொண்ட குழாமில், முதற்தடவையாக வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் கானும், சகலதுறை வீரர் ஆமீத் யாமினும் இடம்பெற்றுள்ளனர்.
டெஸ்ட் குழாம் : அஹமட் ஷஷாத், ஷன் மசூத், அசார் அலி, மொஹமட் ஹபீஸ், பவாத் அலாம், அசாத் ஷாஃபிக், மிஸ்பா உல்ஹக் (தலைவர்), யுனிஸ் கான், சஃப்ராஸ் அகமட், யாசிர் ஷா, சுல்பிகார் பாபர், வகாப் ரியாஸ், இம்ரான் கான், ரகாத் அலி, ஜூனைத் கான்
ஒ.நா.ச.போ குழாம் : அசார் அலி (தலைவர்), அஹமட் ஷஷாத், மொஹமட் ஹபீஸ், ஷோய்ப் மஸ்கூத், ஷோய்ப் மலிக், பாபர் அசாம், அசாத் ஷாஃபிக், சஃப்ராஸ் அகமட், மொகமட் ரிஸ்வான், இமாத் வசிம், அன்வர் அலி, வகாப் ரியாஸ், யாசிர் ஷா, ரகாத் அலி, மொஹமட் இர்பான்
இருபது-20 குழாம் : அஹமட் ஷஷாத், முக்தார் அகமட், உமர் அக்மல், மொஹமட் ஹபீஸ், ஷோய்ப் மஸ்கூத், ஷோய்ப் மலிக், அமீர் யமின், இர்பான், பிலால் ஆசிப், வகாப் ரியாஸ், இமாட் வாசிம், சொஹைல் தன்வீர், மொஹமட் ரிஸ்வான், இம்ரான் கான்
11 minute ago
24 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
35 minute ago
2 hours ago