2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பாகிஸ்தான் குழாம்களில் சமி, ஷர்ஜீல்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20, ஆசியக் கிண்ண குழாம்களில், வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மட் சமி, துடுப்பாட்டவீரர் ஷர்ஜீல் கான் ஆகியோரை பாகிஸ்தான் இணைத்துக்கொண்டுள்ளது. துடுப்பாட்டவீரர் பாபர் அஸாம், வேகப்பந்துவீச்ச்சாளர் ருமான் ரமீஸ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்தே மேற்படி மாற்றங்கள் பாகிஸ்தான் குழாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, உலக இருபதுக்கு-20 தொடரில் இஃப்திகார் அஹ்மெட்டுக்கு பதில் துடுப்பாட்டவீரர் காலிட் லத்திவ் இணைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் பயிற்சியொன்றின்போது, இடது முன்னங்கையில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக பாபர் அஸாம், மூன்று தொடக்கம் நான்கு வாரங்கள் போட்டியில் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பின் தொடை தசைநாரில் ஏற்பட்ட முதலாம் தர நிலையிலான பிடிப்புக் காரணமாக, அறுபது சதவீதமான உடற்றகுதியுடனேயே ருமான் ரமீஸ் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வெளியீட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய காலித் லத்தீவ், எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் உலக இருபதுக்கு-20 குழாமை மாற்றலாம் என்ற வசதியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தாலும் தொழில்நுட்பக் காரணங்கள் காரணமாக ஆசியக் கிண்ண குழாமில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .