Shanmugan Murugavel / 2016 மார்ச் 17 , மு.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இடம்பெற்றுவரும் பெண்களுக்கான உலக இருபதுக்கு-20 தொடரில், கடந்தபுதன்கிழமை (16), மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையே சென்னையில் இடம்பெற்ற போட்டியில் காயமடைந்த பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனை ஜாவெரியா கான், உள்ளூர் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸின் நான்காவது பந்தானது மேற்கிந்தியத்தீவுகளின் வேகப்பந்துவீச்சு வீராங்கனையான ஷமிலியா கொன்னால் வீசப்பட்டிருந்த நிலையில், அப்பந்தே ஜாவெரியாவின் கீழ்த் தாடையை தாக்கியிருந்தது.
இதனையடுத்து சிறிதளவு நினைவிழந்து காணப்பட்ட அவர், உடனடியாக களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், முற்பாதுகாப்பு நடவடிக்கையாக, ஸ்கான்களுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட சி.டி ஸ்கான்களில் அவர் நிலையாக இருப்பதாகவும் ஆபத்தை தாண்டியுள்ளதாகவும் முறிவு உட்பட எந்தவித மோசமான காயமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago