Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சுற்றுத் தொடரின் ஆண்கள் ஒற்றையர் சம்பியனாக, உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவைச் சேர்ந்த நொவக் ஜோக்கோவிச் தெரிவாகியுள்ளார்.
முன்னாள் முதல்நிலை வீரரும் உலகின் இரண்டாம் நிலை வீரருமான சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரைத் தோற்கடித்தே அவர் சம்பியன் பட்டம் வென்றார்.
போட்டியின் முதலாவது செட்டின் முதலாவது புள்ளியைப் பெற்று ஆரம்பித்த பெடரர், 3-2 என்ற புள்ளிகளுடன் முன்னிலையில் காணப்பட்ட போதிலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோக்கோவிச், 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாவது செட்டில், இரண்டு வீரர்களும் மாறி மாறிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் பெடரர் வெற்றிபெற்றார்.
மூன்றாவது செட்டில், 3-4 என்ற புள்ளிகள் கணக்கில் பின்னிலையில் காணப்பட்ட ஜோக்கோவிச், அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம், நான்காவது செட் முக்கியமானதாக மாறியது.
நான்காவது செட்டில், 5-2 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச் முன்னிலை வகிக்க, பெடரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 5-4 என்ற புள்ளிகள் நிலையை ஏற்படுத்தினார். எனினும், இறுதியில் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோக்கோவிச் வெற்றிபெற்றார்.
இது, நொவக் ஜோக்கோவிச்சின் 10ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டமென்பதோடு, இத்தொடருக்கு முன்னர் இடம்பெற்ற கிரான்ட் ஸ்லாம் தொடரான விம்பிள்டன் இறுதிப் போட்டியிலும், 4 செட்களில் நொவக் ஜோக்கோவிச் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தொடரின் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில், 4ஆம் நிலை ஜோடியான அவுஸ்திரேலியான் கஸே டெலக்குவா, கஸகஸ்தானின் யரோஸ்லாவா ஷ்வெதோவா ஜோடியை எதிர்கொண்ட முதல்நிலை ஜோடியான இந்தியாவின் சானியா மிர்ஸா, சுவிட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago