Shanmugan Murugavel / 2016 ஜனவரி 18 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது டென்னிஸ் வாழ்வின் ஆரம்பத்தில், போட்டியொன்றைத் தோற்குமாறு கோரி அணுகப்பட்டதாக, உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் தெரிவித்துள்ளார். தற்போது எழுந்துள்ள போட்டி நிர்ணயச் சர்ச்சைகளைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டு, சென். பீற்றர்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற தொடரின் முதற்சுற்றில் தோல்வியடையுமாறு, தன்னிடம் கோரப்பட்டதாகத் தெரிவித்தார்.
தன்னிடம் நேரடியாகக் கோரப்படவில்லை எனத் தெரிவித்த அவர், தன்னோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் மூலமாகவே கோரப்பட்டதாகவும், தோற்பதற்காக 200,000 அமெரிக்க டொலர்கள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த உலகின் முதல்நிலை வீராங்கனை செரினா வில்லியம்ஸ், 'நான் விளையாடும் போது, எனக்காக மாத்திரமே நான் பதிலளிக்க முடியும். நான் கடுமையாக விளையாடுவேன், நான் விளையாடும் ஒவ்வொரு வீரரும், கடுமையாகவே விளையாடுவதாகத் தெரிகிறது. அது (போட்டி நிர்ணயம்) நடப்பதாக இருந்தால், அதைப்பற்றி எனக்குத் தெரியாது" என்றார்.
ஆண்களில் ஏழாம் நிலை வீரரான ஜப்பானின் கேய் நிஷிகோரியும், அவ்வாறான விடயங்கள் இடம்பெற்றமை குறித்துத் தனக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டார்.
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago