2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பொதுநலவாய விளையாட்டுகளில் பெண்கள் கிரிக்கெட்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 03 , மு.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநலவாய விளையாட்டுகள் சம்மேளனத்தால் மேற்கொள்ளப்பட்ட அளிக்கையையடுத்து, தென்னாபிரிக்காவின் டேர்பனில் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுகளில் பெண்கள் கிரிக்கெட்டினை சேர்ப்பதுக்கு ஆதரவு வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை இணங்கியுள்ளது. குறித்த பொதுநலவாய விளையாட்டுகளில் பெண்கள் கிரிக்கெட்டினை சேர்ப்பதுக்கு சர்வதேச கிரிக்கெட சபை விண்ணப்பிக்கவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் வெளியீட்டொன்றில், பொதுநலவாய விளையாட்டுகளில் கிரிக்கெட்டை உள்ளடக்குவதை உறுதிப்படுத்தும் பொருட்டும் எவ்வாறான முறையில் தொடர் இடம்பெற வேண்டுமென்பது குறித்தும் எவ்வாறு அணிகள் தகுதி பெற வேண்டுமென்பது குறித்தும் பொதுநலவாய விளையாட்டுகள் சம்மேளனத்தோடு சர்வதேச கிரிக்கெட் சபை நெருங்கி பணியாற்றுமென்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .