Shanmugan Murugavel / 2016 மே 14 , மு.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீபாவின் முதலாவது பெண் செயலாளர் நாயகமாக செனகலின் பட்மா சம்பா டியோவ் சமௌரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர், 12 வருடங்களுக்கு கால்பந்தாட்டம் தொடர்பான செயற்பாடுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் செயலாளர் நாயகம் ஜெரோம் வல்கியை பிரதியீடு செய்கிறார்.
ஐக்கிய நாடுகளில் 21 வருடங்கள் பணிபுரிந்த 54 வயதான சமௌரா, கால்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் உடலான பீபாவில், எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் பணியாற்றவுள்ளார்.
மெக்ஸிக்கோ தலைநகரில் இடம்பெற்ற பீபா கொங்கிரஸில் சமௌராவின் நியமனம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று எனக்கு அருமையான நாள் என்று தெரிவித்த சமௌரா, தான் இந்தப் பதவியை ஏற்பதால் பெருமையடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .