Shanmugan Murugavel / 2016 மார்ச் 13 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக இருபதுக்கு-20 தொடரின் தகுதிகாண் சுற்றில், டெஸ்ட் விளையாடும் நாடான சிம்பாப்வேயை இலகுவாக வெற்றிகொண்ட ஆப்கானிஸ்தான் அணி, பிரதான சுற்றுக்குத் தகுதிபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களைக் குவித்தது. அவ்வணி சார்பாக மொஹமட் நபி 52 (32), சமியுல்லா ஷென்வாரி 43 (37), மொஹமட் ஷஷாத் 40 (23) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டினாஷே பணியங்கார 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியில் வெற்றிபெறவும் பிரதான சுற்றுக்குத் தகுதிபெறவும் 187 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிலும் களமிறங்கிய சிம்பாப்வே அணி, 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பாக எவருமே 20 ஓட்டங்களைப் பெறவில்லை என்பதோடு, அதிகபட்சமாக டினாஷே பணியங்கார, 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில றஷித் கான் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் ஹமிட் ஹஸன் 3 ஓவர்களில் 11 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக மொஹமட் நபி தெரிவானார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago