Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகாத் தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது.
பார்சிலோனா, செல்ற்றா டீ விகோ ஆகிய அணிகள் மோதியிருந்த போட்டியில், 6-1 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. இப்போட்டியின் 28 ஆவது நிமிடத்தில் லயனல் மெஸ்ஸி, ஒரு கோலைப் பெற்றதுடன், லூயிஸ் சுவரேஸ், 59ஆவது, 75ஆவது, 81ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றிருந்ததுடன் போட்டியின் 84ஆவது நிமிடத்தில், இவான் ரக்டிக் ஒரு கோலினைப் பெற்றிருந்ததுடன் போட்டியின் இறுதி நிமிடத்தில் நேமர் ஒரு கோலினைப் பெற்றிருந்தார். செல்ற்றா டீ வில்கோ சார்பாக பெறப்பட்ட கோலை, 39ஆவது நிமிடத்தில், பெனால்டி மூலம் கூய்டெட்டி ஒரு கோலினைப் பெற்றிருந்தார்.
இப்போட்டியில் பெற்ற வெற்றி மூலம் 57 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடம் பெற்றுள்ள அத்லெட்டிக்கோ மட்ரிட்டை விட மூன்று புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளது. ரியல் மட்ரிட், 53 புள்ளிகளுடன், மூன்றாமிடத்தில் உள்ளது.
அத்லெட்டிக்கோ மட்ரிட், கெட்டாபே ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், பெர்ணான்டோ டோரஸ் பெற்ற கோலின் மூலம், 1-0 என்ற கோல்கணக்கில் அத்லெட்டிக்கோ வெற்றி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .