Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகாத் தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்றது.
பார்சிலோனா அணிக்கும் செவில்லா அணிக்குமிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. பார்சிலோனா அணி சார்பாக, போட்டியின் 31ஆவது நிமிடத்தில் லயனல் மெஸ்ஸி ஒரு கோலைப் பெற்றதுடன் போட்டியின் 48ஆவது நிமிடத்தில் ஜெராட் பீகே ஒரு கோலைப் பெற்றிருந்தார்.
இப்போட்டியுடன் சேர்த்து, 34 போட்டிகளில் தோல்வியடையாத பார்சிலோனா, ஸ்பானிய லா லிகாக் கழகமொன்று அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்தமை என்ற சாதனையை பார்சிலோனா சமப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர், 1988-89 பருவகாலத்தில் றியல் மட்ரிட் மேற்படி சாதனையைக் கொண்டிருந்தது.
இப்போட்டியில் பெற்ற கோலுடன் சேர்த்து எட்டாவதுந பருவகாலமாக தொடர்ச்சியாக 30 கோல்களை லயனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். இதேவேளை, இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 66 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா, லா லிகாப் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான புள்ளிகள் வித்தியாசத்தை எட்டாக அதிகரித்துக் கொண்டுள்ளதுடன், தமது வைரிகளான மூன்றாமிடத்தில் உள்ள றியல் மட்ரிட்டுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை 12ஆக அதிகரித்துக் கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .