Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் எட்டாம் திகதியிலிருந்து ஏப்ரல் மூன்றாம் திகதிவரை இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரின் மேற்கிந்தியத் தீவுகளின் குழாமில், துடுப்பாட்ட வீரர் டரன் பிராவோவுக்கு பதிலாக, விக்கெட்காப்பாளர் ஜோன்சன் சாள்ஸ் பிரதியீடு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டே, இக்காலகட்டத்தில், தனது முன்னுரிமை எனத் தெரிவித்து, மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் சபையினால், கடந்த வாரம் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்திருந்தார்.
இருபத்தேழு வயதான சாள்ஸ், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 23, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியிருந்ததோடு, இறுதியாக, கடந்த நவம்பரில், மேற்கிந்தியத்தீவுகளுக்காக போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.
உலக இருபதுக்கு-20 தொடரின், சுப்பர் 10 பிரிவில், குழு 1இல் மேற்கிந்தியத்தீவுகள் இடம்பெற்றுள்ளது. இக்குழுவில், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, முதலாவது சுற்றிலிருந்து தெரிவாகும் ஒரு அணியும், இக்குழுவில் இடம்பெறவுள்ளது.
4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago