Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, தலையில் பந்து தாக்கியதன் காரணமாக உயிரிழந்த பிலிப் ஹியூஸ் மீது, அளவுக்கதிகமான பௌண்சர் பந்துகள் வீசப்படவில்லை எனத் தெரிவித்துள்ள துடுப்பாட்ட வீரரான டொம் கூப்பர், அவரைக் கொல்லப் போவதாக எவரும் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஷோன் அபொட் வீசிய பந்துவீச்சிலேயே அவர் உயிரிழந்த போதிலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான டக் பொலிஞ்சர், "நான் உங்களைக் கொல்லப் போகிறேன்" என, ஹியூஸிடம் தெரிவித்ததாக, மருத்துவ இறப்பு ஆய்வறிக்கைக்கான விசாரணைகளின் முதல் நாளான நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. அதை, பொலிஞ்சர் மறுத்திருந்தார்.
இந்நிலையில், ஹியூஸ் மரணிக்கும் போது, மறுமுனையில் துடுப்பாட்ட வீரராக இருந்த கூப்பர், நேற்றைய தினம் வாக்குமூலமளித்தார். அதன் போது, ஹியூஸின் குடும்ப சார்பு சட்டப் பிரதிநிதியால் கடுமையாகக் கேள்விகளால் துளைக்கப்பட்ட கூப்பர், அங்கு அழுதிருந்தார்.
"அவர் (ஹியூஸ்), ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். அவர், ஓட்டங்களைக் குவிப்பதைத் தடுப்பதற்கு, அவர்கள் (நியூ சௌத் வேல்ஸ் அணியினர்) முயன்று கொண்டிருந்தனர். அதை அவர், இலகுவாக எதிர்கொண்டார். அங்கு, கவலைப்படுமளவுக்கு எதுவும் இருக்கவில்லை. அவர் இலக்கு வைக்கப்பட்டார் என நான் நினைக்கிறேன், ஆனால், கனவான் தனத்துக்குப் புறம்பாக, அந்த இலக்கு வைப்பு இருந்ததாக நான் நினைக்கவில்லை. அவர் மீது அந்த யுத்தி பிரயோகிக்கப்பட்டது, ஆனால், ஓட்ட வீதத்தைக் குறைப்பதற்காகவன்றி, வேறு எதற்காகவும் அல்ல" என்று, கூப்பர் குறிப்பிட்டார்.
பொலிஞ்சர் தெரிவித்ததாகக் கூறப்பட்ட விடயம் தொடர்பாகக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கூப்பர், "அது நடக்கவில்லை என்பதில் நான் நம்பிக்கையாக உள்ளேன். அவ்வாறு நடந்திருந்தால், அதை ஞாபகத்தில் வைத்திருந்திருப்பேன். அது, தனிப்பட்ட ரீதியானது, அது, என் மனதில் பதிந்திருக்கும்" என்றார்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago