Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றதாகக் கூறப்படும் 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் சம்பந்தட்ட ஊழல் தொடர்பாக, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் இடைநிறுத்தப்பட்டுள்ள தலைவரான செப் பிளட்டர் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் திணைக்களமே, இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அறிவிக்கப்படுகிறது.
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் முக்கிய அதிகாரிகள், இவ்வாண்டு மே மாதத்தில் கைது செய்யப்படத் தொடங்கப்படுவதற்கு முன்னரே, இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பீபாவின் முன்னாள் கௌரவ தலைவரான ஜோவோ ஹவெலங்கே, 1 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் சம்பந்தமான ஊழல் தொடர்பில், 2013ஆம் ஆண்டில் விலகியிருந்தார். அவரும், அவருடைய மருமகனான பிரேசில் கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான றிக்கார்டோ டெய்ஸெய்ரியோவுமே, இந்த ஊழலைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜோவோ ஹவெலங்கே அனுப்பியுள்ள கடிதமொன்றில், அந்த ஊழல் சம்பவங்கள் அனைத்துமே, அப்போதைய தலைவரான செப் பிளட்டருக்குத் தெரிந்திருந்தன எனத் தெரிவித்திருந்தார். அத்தோடு, அது சம்பந்தமான அனைத்து விடயங்களும், பிளட்டருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தன எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்தே, அவர் மீதான விசாரணைகள் ஆரம்பித்து இடம்பெறுதாக, பி.பி.சி செய்திச் சேவையில் இன்று ஒளிபரப்பான விவரணப்படமொன்று, வெளிப்படுத்தியுள்ளது.
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago