Shanmugan Murugavel / 2015 நவம்பர் 25 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் மைக்கல் பிளட்டினிக்கு, கால்பந்தாட்டத்திலிருந்து வாழ்நாள் தடை விதிப்பதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பிளட்டினிக்கும் பீபா தலைவர் செப் பிளட்டருக்கும், ஏழு வருடத் தடை விதிப்பதற்கான பரிந்துரைகள் காணப்படுவதாக, முன்னர் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, வழக்கறிஞரின் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிளட்டினிக்கு அதிகளவிலான தண்டனை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அவரது வழக்கறிஞர், இப்பரிந்துரைகள் மோசமானவை எனவும் குறிப்பிட்டார்.
பிளட்டினிக்கும் பிளட்டருக்கும், 90 நாட்கள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago