Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் இடம்பெறவுள்ள தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கு, புள்ளிகளைப் பயன்படுத்தும் திட்டத்தை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை பிரேரித்துள்ளது. இது தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்ந்து, தனது கருத்தை, இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிகளின் அடிப்படையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முறை, பெண்கள் ஆஷஸ் தொடரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த முறையையே, இங்கும் பயன்படுத்த, இங்கிலாந்து கிரிக்கெட் சபை முயல்கின்றது.
இதன்படி, டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றிக்கு 4 புள்ளிகளும் (வெற்றி தோல்வியின்மைக்கு, இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள்) ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கும் தலா 2 புள்ளிகளும் வழங்கப்படும்.
இதன்படி, ஓர் அணி, 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றால், 12 புள்ளிகளைப் பெற, அத்தொடரில் காணப்படும் 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஒன்றிலும் வெற்றிபெறும் அணியும், 12 புள்ளிகளையே பெறும்.
எனவே, ஒரு வகையான போட்டியில் மாத்திரம் சிறப்பான திறமைகளைக் கொண்ட அணி, தொடரை வெற்றிகொள்ள முடியாது போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
18 minute ago