Shanmugan Murugavel / 2016 ஜனவரி 27 , மு.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகின்ற நிலையில், முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், மிகுதி இரண்டு போட்டிகளுக்கான குழாமில் டவ் பிரேஸ்வெல் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த மிட்செல் மக்நெலகனின் தலைக்கவசத்தினூடாக சென்ற பந்து தாக்கியதில், மக்நெலகனின் இடது கண்ணுக்கு மேலுள்ள என்பு முறிந்ததால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) சிறிய அழகுபடுத்தல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அவரையே பிரேஸ்வெல் பிரதியீடு செய்கிறார்.
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கு நேப்பியரில் ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டிக்கான குழாமில் பிரேஸ்வெல் இடம்பெற்ற போதும், விளையாடும் பதினொருவர் அணியில், மக்நெலகனுக்கு பதில் அடம் மில்லினே இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago