2026 ஜனவரி 17, சனிக்கிழமை

மட்ரிட்டிலிருந்து வெளியேறிய அலோன்ஸோ

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 13 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டிலிருந்து பயிற்சியாளர் ஸ்கெபி அலோன்ஸோ விலகியுள்ளதாக அக்கழகம் திங்கட்கிழமை (12) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மட்ரிட்டின் பி அணியின் முகாமையாளர் அல்வரோ அரபிலோவா அலோன்ஸோ பிரதியிடப்பட்டுள்ளார்.

மூன்றாண்டு ஒப்பந்தத்தில் மே மாதம் நியமிக்கப்பட்ட அலோன்ஸோ, மோசமான போட்டி முடிவுகளைத் தொடர்ந்து ஏழு மாதங்களில் நீக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட வீரர்களான அணித்தலைவர் பெடெரிக்கோ வல்வெர்டே, வினிஷியஸ் ஜூனியர், கிலியான் மப்பே மற்றும் கழகத் தலைவர் புளோரென்டினோ பெரேஸுடன் அலோன்ஸோ முரண்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X