2026 ஜனவரி 17, சனிக்கிழமை

மட்ரிட்டை வீழ்த்தி சம்பியனான பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 12 , பி.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய சுப்பர் கிண்ணத் தொடரில் பார்சிலோனா சம்பியனானது.

சவுதி அரேபியாவில் இன்று  நடைபெற்ற றியல் மட்ரிட்டுடனான இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றே பார்சிலோனா சம்பியனாகியிருந்தது.

பார்சிலோனா சார்பாக றபீனியா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, றொபேர்ட் லெவன்டோஸ்கி ஒரு கோலைப் பெற்றிருந்தார். மட்ரிட் சார்பாக வினிஷியஸ் ஜூனியர், கொன்ஸலோ கர்சியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

லா லிகாவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகளும், கோப்பா டெல் ரேயில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகளுமே வழமையாக இத்தொடரில் பங்கேற்கின்ற நிலையில் இரண்டிலும் பார்சிலோனா, றியல் மட்ரிட்டே இருந்ததால், லா லிகாவில் மூன்றாவது, நான்காவது இடங்களைப் பெற்ற அத்லெட்டிகோ மட்ரிட், அத்லெட்டிக் பில்பாவோ ஆகியன பங்கேற்றிருந்தன.

பில்பாவோவை பார்சிலோனாவும், அத்லெட்டிகோ மட்ரிட்டை றியல் மட்ரிட்டும் தத்தமது அரையிறுதிப் போட்டிகளில் வென்றே இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X