Shanmugan Murugavel / 2016 மே 04 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகளில், உலகின் முன்னணி வீரர்களான அன்டி மரே, ரபேல் நடால் இருவரும் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
இதில், உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, செக் குடியரசின் றடெக் ஸ்டெபனெக்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் அவர், 7-6 (3), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
ஐந்தாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், ரஷ்யாவின் அன்ட்ரே குஸ்னெட்சொவ்வை எதிர்கொண்டார். இப்போட்டியை இலகுவான முறையில் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் நடால் வெற்றிகொண்டார்.
11ஆம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் றாவோனிக், உக்ரைனின் அலெக்ஸான்டர் டொல்கொபொலோவை எதிர்கொண்டார். அப்போட்டியில் அவர், 6-3, 6-7 (3), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
பெண்களுக்கான போட்டிகளில், 5ஆம் நிலை வீரரான செக் குடியரசின் சபரோவா, ரஷ்யாவின் அனஸ்தஸியா பவ்லியுசென்கோவவை எதிர்கொண்ட போதிலும், அப்போட்டியில் அனஸ்தஸியா பங்குபெறாததன் காரணமாக, நேரடியான வெற்றி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
2 hours ago