Shanmugan Murugavel / 2026 ஜனவரி 14 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் விராட் கோலி முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 93 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை அடைந்துள்ளார்.
குறித்த போட்டியில் 84 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டரைல் மிற்செல், மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது, மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 1, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் வனிது ஹசரங்க, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டில் 191 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் ட்ரெவிஸ் ஹெட், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இதே போட்டியில் 150 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago