2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

முதலாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி இலங்கை

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 24 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி இலங்கை பயணிக்கிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியின் இன்றைய நான்காள் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள், எஞ்சிய விக்கெட்டை பிரவீன் ஜெயவிக்கிரமவிடம் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பத்திலேயே பதும் நிஸங்கவை ரஹீம் கொர்ன்வோலிடம் இழந்ததுடன், குறிப்பிட்ட நேரத்தில் ஒஷாத பெர்ணான்டோவை ஜோமெல் வொரிக்கானிடம் பறிகொடுத்தது.

எனினும், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸின் இணைப்பாட்டத்தில் முன்னிலையை அதிகரித்த நிலையில், 83 ஓட்டங்களுடன் கருணாரத்ன கொர்ன்வோலிடம் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த தனஞ்சய டி சில்வாவும் உடனேயே வொரிக்கானிடம் வீழ்ந்த நிலையில், மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 69, தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றிருக்கையில், 4 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றதோடு தமது இனிங்ஸை இலங்கை இடைநிறுத்தியது.

இதையடுத்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள், ரமேஷ் மென்டிஸ் (4), லசித் எம்புல்தெனியவிடம் (2) வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இன்றைய நான்காம் நாள் ஆட்டமுடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், என்குறுமஹ் பொன்னர் 18, ஜோஷுவா டா சில்வா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.

நாளைய ஐந்தாவது இறுதி நாளில் இலங்கையின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X