2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மரதனோட்டத்தில் குளிர் வானிலையால் 21 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 மே 23 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேற்கு சீனாவிலுள்ள கன்சு மாகாணத்தில் தீவிரமான குளிர் வானிலையானது மரதனோட்டத்தைத் தாக்கிய நிலையில் 21 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.

இம்மரதனோட்டமானது நேற்று காலையில் ஆரம்பித்திருந்ததுடன், அன்று மதியம் மலைப் பகுதியூடாகச் செல்லும்போது மழையை எதிர்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிய மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 1,200க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தரையிறக்கப்பட்டதாக ஸின்குவா தெரிவித்துள்ளது. மோசமான வானிலையையடுத்த நிலச்சரிவொன்றால் மீட்புப் பணி பாதிக்கபட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பந்தயத்தில் மொத்தம் 172 பேர் பங்கேற்ற நிலையில், 151 பேர் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .