Shanmugan Murugavel / 2016 ஜூன் 08 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியமைக்காக, டென்னிஸ் போட்டிகளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாண்டு இடம்பெற்ற அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் தொடரின்போதும் (ஜனவரி 26, 2016) தொடருக்குப் பின்னர் மொஸ்கோவில் வைத்தும் (பெப்ரவரி 2, 2016) சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், தடைசெய்யப்பட்ட மருந்தான மெல்டோனியத்தை அவர் உட்கொண்டிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மார்ச் மாதத்திலிருந்து அவர் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, ஊக்கமருந்துக்கெதிரான விசாரணைகள், இலண்டனில் கடந்த மாதம் இடம்பெற்றன.
இந்த விசாரணைகளின் முடிவிலேயே, அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பதற்கு, சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கான தடை, ஜனவரி 26ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது. எனவே, 2018ஆம் ஆண்டு ஜனவரியோடு அவரது தடை முடிவடையும்.
மறுபுறத்தில், அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் தொடரில் காலிறுதிப் போட்டிக்கு அவர் தகுதிபெற்றிருந்த நிலையில், அதன் காரணமாக அவருக்குக் கிடைத்த தரப்படுத்தல் புள்ளிகள் 430உம், பரிசுத் தொகையான 281,633 அவுஸ்திரேலிய டொலர்களும், அவரிடமிருந்து மீளப்பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
இந்தத் தண்டனையை, மிகவும் பாரதூரமான தண்டனை என விளித்துள்ள மரியா ஷரபோவா, போட்டிகளில் அனுகூலத்தைப் பெறுவதற்காக இதைப் பயன்படுத்தவில்லை என்பதை, இதை விசாரணை செய்த தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்ட போதிலும், இவ்வாறு 2 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளதாகவும், இதற்கெதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago