2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 25 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டை இலங்கை வென்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியின் இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள், என்குறுமம்ஹ் பொன்னர், ஜோஷுவா டா சில்வாவின் இணைப்பாட்டத்தில் இனிங்ஸை நகர்த்தியது.

எனினும், 54 ஓட்டங்களுடன் லசித் எம்புல்தெனியவிடம் டா சில்வா வீழ்ந்ததோடு, தொடர்ந்து வந்த ரஹீம் கொர்ன்வோல் குறிப்பிட்ட நேரத்தில் பிரவீன் ஜெயவிக்கிரமவிடம் வீழ்ந்திருந்தார்.

பின்னர் வந்த ஜோமெல் வொரிக்கான், ஷனொன் கப்ரியலும் லசித் எம்புல்தெனியவிடம் விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களையே பெற்ற மேற்கிந்தியத் தீவுகள், 187 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. என்குறுமஹ் பொன்னர் 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்நிலையில், இப்போட்டியின் நாயகனாக இலங்கையணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 386/10 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 147, தனஞ்சய டி சில்வா 61, பதும் நிஸங்க 56, தினேஷ் சந்திமால் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: றொஸ்டன் சேஸ் 5/83, ஜோமெல் வொரிக்கான் 3/87, ஷனொன் கப்ரியல் 2/69)

மேற்கிந்தியத் தீவுகள்: 230/10 (துடுப்பாட்டம்: கைல் மேயர்ஸ் 45, கிறேய்க் பிறத்வெய்ட் 41, ரஹீம் கொர்ன்வோல் 39, ஜேஸன் ஹோல்டர் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரவீன் ஜெயவிக்கிரம 4/40, ரமேஷ் மென்டிஸ் 3/75, சுரங்க லக்மால் 1/10, தனஞ்சய டி சில்வா 1/11, லசித் எம்புல்தெனிய 1/67)

இலங்கை: 191/4 (திமுத் கருணாரத்ன 83, அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 69 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோமெல் வொரிக்கான் 2/42, ரஹீம் கொர்ன்வோல் 2/60)

மேற்கிந்தியத் தீவுகள்:  160/10 (துடுப்பாட்டம்: என்குறுமஹ் பொன்னர் ஆ.இ 68, ஜோஷுவா டா சில்வா 54 ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் எம்புல்தெனிய 5/46, ரமேஷ் மென்டிஸ் 4/64, பிரவீன் ஜெயவிக்கிரம 1/28)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X