Editorial / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் தலைவர் விராத் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டைத் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்திருந்த கோலி, இரண்டாவது டெஸ்டில் சோபிக்காததைத் தொடர்ந்து முதலிடத்தை இழந்திருந்தார், தற்போது மூன்றாவது டெஸ்டில் 200 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, தனது அதிகூடிய தரவரிசைப் புள்ளிகளான 937 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில், குறித்த மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்ஸில் அரைச்சதம் பெற்ற ஹர்டிக் பாண்டியா, ஒன்பது இடங்கள் முன்னேறி 51ஆம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், இந்த டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 23 இடங்கள் முன்னேறி 51ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இது தவிர, இந்த டெஸ்டின் இரண்டாவது இனிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 37ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதேவேளை, மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்ஸில் சதம் பெற்ற இங்கிலாந்தின் ஜொஸ் பட்லர், தரவரிசையில் 22 இடங்கள் முன்னேறி 47ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பின்வருமாறு,
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026