2026 மார்ச் 12, வியாழக்கிழமை

முதலாமிடத்துக்கு முன்னேறிய மிற்செல்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 21 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு நியூசிலாந்தின் டரைல் மிற்செல் முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கெதிரான இரண்டு போட்டிகளில் 268 ஓட்டங்களைப் பெற்ற மிற்செல், இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது போட்டியில் 112 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் லோகேஷ் ராகுல், 11ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. டரைல் மிற்செல், 2. விராட் கோலி, 3. இப்ராஹிம் ஸட்ரான், 4. றோஹித் ஷர்மா, 5. ஷுப்மன் கில், 6. பாபர் அஸாம், 7. ஹரி டெக்டர், 8. ஷாய் ஹோப், 9. சரித் அசலங்க, 10. லோகேஷ் ராகுல்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ரஷீட் கான், 2. ஜொஃப்ரா ஆர்ச்சர், 3. மகேஷ் தீக்‌ஷன, 4. கேஷவ் மஹராஜ், 5. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ், 6. ஜொஷ் ஹேசில்வூட், 7. குல்தீப் யாதவ், 8. அப்ரார் அஹ்மட், 9. வனிது ஹசரங்க, 10. மிற்செல் சான்ட்னெர்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. அஸ்மதுல்லா ஓமர்ஸாய், 2. சிகண்டர் ராசா, 3. மொஹமட் நபி, 4. மெஹிடி ஹஸன் மிராஸ், 5. ரஷீட் கான்.

இதுதவிர மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. வருண் சக்கரவர்த்தி, 2. ரஷீட் கான், 3. வனிது ஹசரங்க, 4. ஜேக்கப் டஃபி, 5. அப்ரார் அஹ்மட், 6. அடில் ரஷீட், 7. அகீல் ஹொஸைன், 8. முஸ்தபிசூர் ரஹ்மான், 9. நாதன் எலிஸ், 10. அடம் ஸாம்பா.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. அபிஷேக் ஷர்மா, 2. பில் ஸோல்ட், 3. திலக் வர்மா, 4. ஜொஸ் பட்லர், 5. சஹிப்ஸடா பர்ஹான், 6. பதும் நிஸங்க, 7. ட்ரெவிஸ் ஹெட், 8. மிற்செல் மாஷ், 9. டிம் செய்ஃபேர்ட், 10. டெவால்ட் பிறெவிஸ்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. சிகண்டர் ராசா, 2. சைம் அயூப், 3. றொஸ்டன் சேஸ், 4. ஹர்திக் பாண்டியா, 5. மொஹமட் நவாஸ்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .