Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 16 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார்.
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை ரஷீட் அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையிலும் ஆறாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த போட்டிகளில் 60 ஓட்டங்களைப் பெற்றதுடன், 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரஷீட்டின் சக சகலதுறைவீரர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய், இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை மேற்படி போட்டிகளில் 213 ஓட்டங்களைப் பெற்ற ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஸட்ரான், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 10ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 183 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் யஷஸ்வி ஜைஸ்வால், டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
37 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
8 hours ago
9 hours ago