Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு சிம்பாப்வேயின் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார்.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஓமானுக்கெதிரான குழுநிலைப் போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை ராசா அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை உலகக் கிண்ணத் தொடரில் நெதர்லாந்துக்கெதிராக 47, ஐக்கிய அமெரிக்காவுக்கெதிராக 73 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் சஹிப்ஸடா பர்ஹான், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தானுக்கெதிராக 65, ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிராக 89 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டிம் செய்ஃபேர்ட், ஒன்பதாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதுதவிர அயர்லாந்துக்கெதிரான உலகக் கிண்ணப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் வனிது ஹசரங்க, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கெதிரான உலகக் கிண்ணப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான், 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago